“லெமன் ரைஸில் காத்திருந்த ஆபத்து!”… விமான நிலைய உணவகத்தின் லட்சணம்…. இணையத்தில் வைரலாகும் vவீடியோ…!!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஊழியர்களுக்கான உணவகத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சை சாதத்தில் (Lemon Rice) பெரிய அளவிலான கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஊழியர் ஒருவர் தனது உணவில் இருந்த கல்லைத் தனியாக எடுத்து வைத்து, உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத் தொழிலாளர் சங்கம் (Airport Workers Union) நிர்வாகத்திற்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஊழியர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

   

விமான நிலைய ஊழியர்களுக்குத் தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை நிர்வாகம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது விமான நிலைய வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.