நடப்பு பிஎஸ்எல் (PSL 2026) தொடரின் ஒளிபரப்பின் போது, முன்னாள் வீரர்கள் முஷ்டாக் அகமது மற்றும் டொமினிக் கார்க் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேரலை ஒளிபரப்பின் போது முஷ்டாக் அகமது, டொமினிக் கார்க்கைப் பார்த்து, “நீ எத்தனை முறை என் பாக்கெட்டில் இருந்தாய் தெரியுமா?” (How many times you were in my pocket?) என்று கிண்டலாகக் கேட்டார். விளையாட்டுக் காலத்தில் முஷ்டாக் அகமதுவின் பந்துவீச்சில் டொமினிக் கார்க் திணறியதை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்தக் கேள்வி, அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தாலும், சற்று தர்மசங்கடமான சூழலையும் உருவாக்கியது.
இதற்குப் பதிலளித்த டொமினிக் கார்க், அந்தச் சூழலை நகைச்சுவையாகக் கையாண்டார். களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிய காலத்தின் சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர்கள், தற்போதைய வர்ணனையாளர் பணியிலும் அதே கலகலப்பைத் தொடர்ந்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த “ஆக்வர்ட்” உரையாடல் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது, குறிப்பாக முன்னாள் வீரர்களுக்கு இடையே இருக்கும் ஆரோக்கியமான கிண்டலும் கேலியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
🚨🚨Mushtaq Ahmed embarrassed dominic cork on camera
– i meam he was just simply asking him a question and all of sudden Mushtaq Ahmed just embarrassed him,
• Lack of manners or what ? pic.twitter.com/311CC3KQUX
— Rohit (@Iam_Rohit_G) March 27, 2026
