விஜய்யால் எங்களுக்கு நஷ்டம்தான்… அமித்ஷா போட்ட அதிரடி குண்டு… விஜய் – பாஜக கூட்டணி கனவு அவுட்?… ஓப்பனாக பேசிய உள்துறை அமைச்சர்…!!!

By Rajeshwari on பங்குனி 28, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜய் கட்சி எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் அது தங்களது வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கருதுவதாகவும், அதன் காரணமாகவே தாங்கள் கூட்டணி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

   

இதனால் விஜய்யின் தவெக தனித்து களம் காணப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் இணையக்கூடும் எனப் பரவிய வதந்திகளுக்கு அமித்ஷாவின் இந்தப் பேச்சு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

   

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், விஜய்யால் தங்களுக்குப் பெரிய அளவில் அரசியல் லாபம் இருக்காது என்ற தொனியிலேயே பாஜக மேலிடத்தின் நிலைப்பாடு இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் தங்கள் கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி பாஜக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.