சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரைக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் பகுதி மிகவும் நெருக்கடியானது என்றும், அங்கு பொதுக்கூட்டம் நடத்தினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படும் என்றும் காரணம் கூறி இந்த அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த முடிவையடுத்து, மாற்று இடத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு அக்கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தவெக தரப்பினர் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிடத் திட்டமிட்டுள்ளனர். விஜய் இந்தப் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இந்த அனுமதி மறுப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
