மகாராஷ்டிராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் (MCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 664 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதச் சம்பளமாக ரூ.47,330 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அல்லது மைனிங் இன்ஜினியரிங்கில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
