திமுக கூட்டணியில் விரிசல்..? அதிருப்தியில் தவெக-வுக்கு தாவும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!!

By Soundarya on பங்குனி 27, 2026

Spread the love

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடிவில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர். நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் மற்றும் கமலம்மாள் ஆகியோர் தவெக-வில் இணைந்தனர்.

மேலும் சில அதிருப்தி நிர்வாகிகள் அக்கட்சியில் இணையக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.