மகாராஷ்டிர மாநிலம் தானே ஹிரானந்தானி எஸ்டேட் மேம்பாலத்தில், புதன்கிழமை அதிகாலை சுமார் 2:10 மணியளவில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் எதிர்பாராதவிதமாகத் தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஓட்டுநருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#WATCH | A car overturned on the Hiranandani Estate flyover bridge in Thane around 2:10 AM after the driver allegedly fell asleep and lost control. #ThaneAccident #ThaneNews #HiranandaniEstate pic.twitter.com/DKsA9db2b8
— Free Press Journal (@fpjindia) March 25, 2026
இந்த விபத்தினால் அந்த பிஸியான மேம்பாலப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் கவிழ்ந்த காரை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இதேபோல் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே மற்றொரு எஸ்யுவி (SUV) கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த சாலை விபத்துகள் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
View this post on Instagram
