ஈரானின் மெகா துறைமுகம் காலி…! நடுக்கடலில் இஸ்ரேல் நடத்திய ‘மின்னல்’ தாக்குதல்…. செம கடுப்பில் புதின்… உலக நாடுகளிடையே பதற்றம்…!!

By Devi Ramu on பங்குனி 25, 2026

Spread the love

ரஷியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ உறவைச் சிதைக்கும் நோக்கில், காஸ்பியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் பந்தர் அன்சாலி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் போருக்காக ஈரானிடமிருந்து ரஷியாவிற்குத் தேவையான டிரோன்கள் மற்றும் தளவாடங்கள் இந்தத் துறைமுகம் வழியாகவே அனுப்பப்பட்டு வந்தன.

தற்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள், கடற்படை கட்டுப்பாட்டு மையம் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோகச் சங்கிலியைத் துண்டிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

   

இதுவரை போர்ச் செய்திகளில் இடம்பெறாத அமைதியான பகுதியாக இருந்த காஸ்பியன் கடல் பகுதியில், தற்போது புகைச்சல் கிளம்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ரஷியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான நடவடிக்கைகள் தற்போதைய போரை மேலும் விரிவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

   

இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா 15 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ள போதிலும், காஸ்பியன் கடல் பகுதி வரை போர் பரவியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் கடல்வழி வர்த்தகம் மற்றும் ரஷியாவின் ராணுவத் தேவைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.