2026 தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு விழுந்த அதிரடித் தடை… வெளியானது ரகசிய அறிக்கை… டிவி மற்றும் நியூஸ் சேனல்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட செக்..!!!

By Rajeshwari on பங்குனி 24, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கான கடும் கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ அல்லது அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரக் காலப்பகுதியில் எந்தவொரு மின்னணு ஊடகத்திலும் கருத்துக் கணிப்பு முடிவுகளைக் காட்சிப்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

   

இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் நபர்களுக்கு 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

இதனால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் முடிவுகளில் தேவையற்றத் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும், தேர்தல் அமைதியைப் பேணவும் இந்தக் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.