“தேங்காயால் தலையில் அடித்து…” பக்தர்களைச் சுத்திப் போட்டு அடித்த 20 அர்ச்சகர்கள்… கோலாப்பூர் ஜோதிபா கோயிலில் நேர்ந்த பயங்கரம்…!!

By Devi Ramu on பங்குனி 24, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஜோதிபா ஆலயத்தில், அர்ச்சகர்கள் சிலர் பக்தர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களுக்கும், அங்கிருந்த அர்ச்சகர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது கைக்கலப்பாக மாறிய நிலையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஒன்று திரண்டு அந்தப் பக்தர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒரு அர்ச்சகர், பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காயை எடுத்துப் பக்தரின் தலையிலேயே அடித்துக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது.

   

இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்ட மற்ற பக்தர்கள் அச்சமடைந்து அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர். அர்ச்சகர்களின் இந்த அத்துமீறல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

“தேங்காயால் தலையில் அடித்து…” பக்தர்களைச் சுத்திப் போட்டு அடித்த 20 அர்ச்சகர்கள்… கோலாப்பூர் ஜோதிபா கோயிலில் நேர்ந்த பயங்கரம்…!!எதற்காவ இந்தப் போராட்டம் வெடித்தது என்பது குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதமான கோயில் வளாகத்திற்குள் அராஜகத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.