BIG NEWS: ஸ்டாலினுக்கு செம ஷாக்… “தளபதி விஜய் என்ட்ரி… திமுக-வுக்கு செக்”… புதிய கருத்துக்கணிப்பு….!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

சமீபத்தில் வெளியான CNN News18 கருத்துக்கணிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கியதாக மக்கள் கருதுவது திமுக தரப்பிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த கணிப்பின்படி, வரும் தேர்தலில் திமுக கூட்டணி 40.1% வாக்குகளுடன் 113-123 இடங்களையும், அதிமுக கூட்டணி 38.1% வாக்குகளுடன் 106-116 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவதுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 14.8% வாக்குகளைப் பெற்று 2-8 இடங்கள் வரை வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என உறுதியாக நம்பியிருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் இந்த மிகச்சிறிய இடைவெளி மற்றும் தவெக-வின் வாக்கு வங்கி உயர்வு ஆகியவை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.