“மறைந்தது டிஜிட்டல் உலகின் பிரம்மாண்டம்”: OnlyFans உரிமையாளர் லியோனிட் ராட்வின்ஸ்கி புற்றுநோயால் காலமானார்..!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

புரொபஷனல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கான தளமான ‘OnlyFans’ நிறுவனத்தின் உரிமையாளர் லியோனிட் ராட்வின்ஸ்கி (43), புற்றுநோய் காரணமாக காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், மார்ச் 20, 2026 அன்று அமைதியான முறையில் உயிரிழந்ததாக அவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரேனிய-அமெரிக்கரான இவர், திரைமறைவில் இருந்து செயல்படும் ஒரு பெரும் கோடீஸ்வரராகவே அறியப்பட்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டில், டிம் ஸ்டோக்லி என்ற பிரிட்டிஷ் நிறுவனரிடமிருந்து ‘OnlyFans’ தளத்தின் தாய் நிறுவனமான ‘Fenix International’-ஐ லியோனிட் ராட்வின்ஸ்கி விலைக்கு வாங்கினார். இவரது தலைமையின் கீழ், குறிப்பாக கோவிட்-19 காலகட்டத்தில், அத்தளம் உலகளவில் அசுர வளர்ச்சியை எட்டியது. படைப்பாளிகள் நேரடியாகத் தங்களது ரசிகர்களிடம் வருமானம் ஈட்டும் முறையை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மாற்றத்தை இவர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.