“உன் மகளை கொன்னுட்டேன்.. போட்டோ அனுப்பவா?” சடலத்தை எடுத்துட்டு போ… மனைவியைக் கொன்றுவிட்டு மாமியாருக்கு வீடியோ கால் செய்த கொடூரன்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில், போதைக்கு அடிமையான கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம், மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. குலதெய்வ வழிபாட்டிற்காகப் பூசைகள் செய்ய வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி, தனது மனைவியைத் தாய் வீட்டிலிருந்து வரவழைத்த அந்த நபர், வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவரைத் திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு அந்த நபர் காட்டிய இரக்கமற்றத் தனம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மாமியாருக்கு போன் செய்த அந்த நபர், “உன் மகளை நான் கொன்றுவிட்டேன், வேண்டுமானால் பிணத்தின் புகைப்படத்தை அனுப்பி வைக்கவா?” என்று எவ்விதச் சலனமும் இன்றி கேட்டுள்ளார். இந்த ஒற்றை வாக்கியம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்தது மட்டுமல்லாமல், சமூகத்தையே உறைய வைத்துள்ளது.

   

மேலும், தனது அண்ணிக்கும் போன் செய்து சடலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போதை பழக்கத்தால் ஒரு மனிதன் எந்த அளவிற்கு மிருகமாக மாறக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்தப் பாதகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.