திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 இடங்களுக்கும் குறைவாக ஒதுக்கப்பட்டால், பதவியை ராஜினாமா செய்வோம் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பிரேமலதாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது தேமுதிக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக, தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலை பிரேமலதா விஜயகாந்துக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் பட்சத்தில், கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற இக்கட்டான நிலையில் தேமுதிக உள்ளது.
