மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதா..? 4,000 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் தளத்தை தாக்கிய ஈரான்… அதிர்ச்சியில் உலகநாடுகள்…!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூட்டு ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவை இலக்கு வைத்து, ஈரான் தனது இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Intermediate-range ballistic missiles) ஏவித் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக, சில நாட்களுக்கு முன்பு இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்த சம்பவம் கூறப்படுகிறது. அந்தப் பயங்கரத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 84 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

   

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளின் முக்கியப் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் இந்த ராணுவ தளம், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பெரும் சேதத்தைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. ஈரானின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.