“எங்கள் கூட்டணி ஒரு சுனாமி…” 234 தொகுதியிலும் அதிரடி காட்டும் பாமக…! ராமதாஸ் மாஸ் பேட்டி…!!

By Devi Ramu on பங்குனி 20, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் தங்களது கூட்டணி போட்டியிடும் என்றும், இது ஒரு வலிமையான வெற்றிக் கூட்டணி என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் கூட்டணியில் இணைய விரும்புபவர்கள் தன்னிடமோ அல்லது சசிகலாவிடமோ தாராளமாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தங்களது இந்த அதிரடி அறிவிப்பு மற்ற அரசியல் கட்சிகளிடையே இப்போதே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களின் பேராதரவுடன் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.