பிரேமலதாவிற்கே இந்த நிலைமையா…? 3,518 டெபாசிட்டுகள் காலி… மிரள வைத்த 2021 தேர்தல் டேட்டா…!!

By Devi Ramu on பங்குனி 20, 2026

Spread the love

2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களின் வைப்புத் தொகையை (Deposit) இழந்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில் 16.67 சதவீதத்தைப் பெறத் தவறினால், வேட்பாளர்கள் செலுத்திய பணம் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்படும்.

கடந்த தேர்தலில் களமிறங்கிய 3,859 பேரில், 3,518 பேர் இந்த இலக்கை எட்ட முடியாமல் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தவிர, மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

   

நாம் தமிழர் கட்சியில் சீமான் மட்டுமே தனது டெபாசிட்டைத் தக்கவைத்த நிலையில், மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் டெபாசிட்டை மீட்டுள்ளனர். அமமுக சார்பில் தினகரன் உட்பட 9 பேர் மட்டுமே இந்தத் தகுதியைப் பெற்றனர். சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் மட்டும் தனது டெபாசிட் தொகையைத் தக்கவைத்து ஒரு சாதனையைச் செய்துள்ளார்.