“சிலிண்டர் பதுக்கினால் இனி அவ்வளவுதான்” மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on பங்குனி 20, 2026

Spread the love

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தடுக்கவும், முறைகேடுகளைக் களையவும் மத்திய அரசு அதிரடியாகக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மாநில அரசுகள் தங்கள் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடையின்றி எரிவாயுவைப் பெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கு மாற்றாக, சிலிண்டர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகப் போக்க குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்புகளை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடின்றி நாடு முழுவதும் சீராகக் கிடைப்பதாகவும், அத்தியாவசிய எரிபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.