BREAKING: இரவில் திடீர் சந்திப்பு.. கூட்டணி கணக்கு மாறுகிறது… காலையிலேயே தமிழக அரசியலில் டுவிஸ்ட்…!

By Nanthini on பங்குனி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சந்தித்துப் பேசியது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்த இழுபறிகளுக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தெரிகிறது; குறிப்பாக, பாஜக தரப்பில் 30 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 22 தொகுதிகளும், அமமுகவுக்கு 6 தொகுதிகளும், தமாகாவிற்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரமாகத் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்திருப்பதால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.