“ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய்” இபிஎஸ்-ஸின் கோட்டையில் இறங்கிய ரூ.275 கோடி பண மூட்டை..? கசிந்த பகீர் தகவல்..!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமையடையாத நிலையில், தனது சொந்த மாவட்டமான சேலத்தில் செல்வாக்கை நிலைநாட்ட எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பாமகவிற்கு ஒரே ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களம் காண முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்காடு தொகுதியில் உஷாராணி மற்றும் வீரபாண்டி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மனோன்மணி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தத் திட்டமிட்டு, தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த முறை சேலம் மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் எப்பாடுபட்டாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது. இதற்காகப் பண பலத்தை (பசையை) வாரி இறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. கடந்த காலங்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அது இருமடங்காக உயர்ந்து 1,000 ரூபாய் வரை பாயும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மற்றும் வட்ட வாரியாக இதற்கான நிதி ஏற்கனவே பிரித்து அனுப்பப்பட்டுவிட்டதாகவும், ஓட்டுக்காக மட்டும் சுமார் 275 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

அதே நேரத்தில், இந்தப் பணத்தை விநியோகம் செய்யும் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளிடையே கடும் ‘குடுமிப்பிடி’ சண்டை நிலவி வருகிறது. கட்சித் தரப்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளவர்கள், தங்களின் பங்காக தலா 10 கோடி ரூபாயைத் தலைமைக்கு ஏற்கனவே ஒப்படைத்துவிட்டதாக முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே சேலம் மாவட்டத்தில் பண விநியோகம் குறித்த பேச்சுகள் கிளம்பியுள்ளது மற்ற கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.