நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு”… சபை நாகரீகம் தெரியாதா?… சி.வி. சண்முகத்தின் கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!

By Rajeshwari on பங்குனி 17, 2026

Spread the love

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அரசின் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தை விமர்சிக்கும் வகையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் அடிப்படை கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும், திரைத்துறை சார்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நடிகர் சங்கத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் கண்டனங்களைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

   

இந்நிலையில் நயன்தாராவின் பெயர் தவறுதலாகவும், எந்தவித உள்நோக்கமும் இல்லாமலும் உச்சரிக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரசியலில் நாகரிகமான முறையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும், குறிப்பாகப் பெண்களைக் குறித்துப் பேசும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.