சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் 3 மாதக் குழந்தையின் வீடியோ ஒன்று பலரின் மனங்களையும் நெகிழச் செய்து வருகிறது. அந்த அழகிய வீடியோவில், பச்சிளம் குழந்தை ஒன்று மகாலட்சுமி தேவியைப் போல அலங்கரிக்கப்பட்டு, தெய்வீகக் களை சொட்டச் சொட்ட காட்சியளிக்கிறது. பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
A heart-touching video of a 3-month-old baby dressed as Goddess Mahalakshmi is melting hearts across social media. In the viral clip, the tiny baby takes part in a beautifully themed photoshoot inspired by the goddess, wearing traditional attire, delicate jewelry, and festive… pic.twitter.com/6PdMz3EVxQ
— SANATAN (@Eternaldharma_) March 16, 2026
இந்தக் கருப்பொருள் (Theme) சார்ந்த புகைப்படப் படப்பிடிப்பிற்காக (Photoshoot), அக்குழந்தைக்குப் பாரம்பரிய உடைகள் உடுத்தப்பட்டு, மிக மென்மையான அணிகலன்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீகக் கருப்பொருளுக்கு ஏற்றாற்போல், மலர்கள் மற்றும் மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னணியில், அக்குழந்தை அமர்ந்திருப்பது அச்சு அசல் மகாலட்சுமியே நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
குழந்தையின் அந்தப் பிஞ்சு முகமும், அதன் மழலைத் தோற்றமும் லட்சுமி தேவியின் அலங்காரத்தோடு இணைந்து பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. “நிஜமான மகாலட்சுமி வீட்டுக்கே வந்துவிட்டாள்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அக்குழந்தைக்குத் தங்களது வாழ்த்துகளையும் ஆசிகளையும் அள்ளி வழங்கி வருகின்றனர்.
