விஜய் மனைவியை வைத்து அரசியல்… அவரோட குடும்பத்தை ஏன் இழுக்குறீங்க.? திமுகவின் ‘ஸ்கெட்ச்’சை உடைத்த ராஜேந்திர பாலாஜி..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவினர் நடிகர் விஜய்யின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் மனைவியைக் குறித்து ஊடகங்களில் விவாதிப்பதும், கேலிப்பொருள் ஆக்குவதும் மிகவும் இழிவான செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசுவதை அதிமுகவும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், விஜய்யின் மீது அவரது மனைவியை வைத்தே வழக்குத் தாக்கல் செய்து, அவரைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்ற தரம் தாழ்ந்த அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றும், அரசியலில் நேர்மையான முறையில் மோத வேண்டும் என்றும் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.