ஒரு நாளைக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.500 தாள்களை வழங்க வேண்டாம்.. வங்கிகளுக்கு RBI உத்தரவு..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

அண்மையில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோத பணப்பட்டுவாடாவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ரூ.500 நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதைக் குறைக்க வங்கிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, வங்கி கிளைகளில் ஒரு நாளைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் 500 ரூபாய் தாள்களைக் கட்டுகளாக வழங்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பணப்புழக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

   

அதேவேளையில், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வழங்குவதில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.