மேட்சிங் மேட்சிங் உடையில் ரவி மோகன்… “சும்மா இருப்பீங்களா?”… விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே ஆர்த்தி ரவி எழுப்பிய அதிரடி கேள்வி… யாரைச் சொல்கிறார் தெரியுமா?…!!!

By Rajeshwari on பங்குனி 15, 2026

Spread the love

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவானது, மறைமுகமாக ரவி மோகனை சாடும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்தப் பதிவில், “நீங்கள் ஓரிடத்திற்குச் செல்லும்போது, அங்கு வேறொருவர் உங்களைப் போலவே அதே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்று ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

   

இந்த ‘கிரிப்டிக்’ பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் ரவி மோகன் ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் ஒரே நிறத்திலான உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைச் சுட்டிக்காட்டும் ரசிகர்கள், ஆர்த்தி ரவி அந்தச் சம்பவத்தை முன்வைத்தே இவ்வாறு பதிவிட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர்.

   

இந்நிலையில் திருமண முறிவுக்குப் பின் தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்து வரும் ஆர்த்தி, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரவி மோகன் தரப்பிற்கு இத்தகைய அதிரடி ‘செக்’ வைத்து வருவதாகவே சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.