BREAKING: “நெதன்யாகுவை கொல்லும் வரை வேட்டையாடுவோம்”.. ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல்..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நிச்சயம் கொல்லாமல் விடமாட்டோம் என ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி” என்று நெதன்யாகுவைச் சாடியுள்ள ஈரான் ராணுவம், அவர் கொல்லப்படும் வரை முழு பலத்துடன் வேட்டையாடுவோம் என்று சூளுரைத்துள்ளது. இந்த விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்கனவே நிலவி வரும் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இந்த நேரடி மிரட்டல் காரணமாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகள் இந்தச் சூழலை மிகத் தீவிரமாகக் கவனித்து வருகின்றன.