“சீட் வேணுமா? 5 கோடி கட்டுங்க!” – வேட்பாளர்களை அதிரவைத்த விஜய்யின் திடீர் கண்டிஷன்… வெளியான ஷாக்கிங் தகவல்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்), தற்போது வேட்பாளர் தேர்வு மற்றும் நிதி விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கட்சியின் தலைவர் விஜய், முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதற்காகப் பனையூர் அலுவலகத்திற்குப் பல நிர்வாகிகளை அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்புகளின் போது, திமுக மற்றும் அதிமுக போன்ற வலுவான கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்கள் பொருளாதார ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றும் விஜய் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தலா ரூ. 5 கோடி தொகையை வைப்புத் தொகையாகக் கட்சித் தலைமையிடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் செலவுகள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தவே இந்த நிதியை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுவதற்குச் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், தகுதியான பல வேட்பாளர்கள் வேட்பாளர் பட்டியலிலிருந்து பின்வாங்கக்கூடும் என்ற அச்சம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

   

அதே நேரத்தில், விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் மட்டும் ஒரு மாறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை என்றும், அந்தத் தொகுதிகளின் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் ஆதவ் அர்ஜுனா ஏற்றுக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வெற்றியை உறுதி செய்ய நிதித் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் தலைமை உறுதியாக இருந்தாலும், மற்ற தொகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் இத்தகைய நிபந்தனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

   

தவெகவின் இந்தத் திடீர் நிபந்தனைகள், கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பிரதான கட்சிகளை எதிர்கொள்வது சவாலான காரியம் என்பதால், வேட்பாளர்களிடம் பெரும் தொகையை எதிர்பார்ப்பது சரியான முடிவா அல்லது தகுதியானவர்களைத் தள்ளி வைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பணம் செலவழிக்கத் தயாராக இருக்கும் செல்வந்தர்களைத் தேர்வு செய்வதா அல்லது கொள்கைப் பிடிப்புள்ள உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பளிப்பதா என்ற குழப்பத்தில் தவெகவின் வேட்பாளர் பட்டியல் தாமதமாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.