புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான தனி கூட்டணியை உருவாக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து, தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
சசிகலாவின் இந்த அழைப்பை ராமதாஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பாமக பலமாக உள்ள வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் சசிகலாவிற்கு போதிய செல்வாக்கு இல்லை என்றும், அதேபோல் சசிகலாவுக்கு ஆதரவு உள்ள தென் மாவட்டங்களில் பாமகவிற்குப் பலமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில் இரு தரப்பும் இணைந்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதால், இந்தத் தனி கூட்டணிக்கு ராமதாஸ் ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
