BREAKING: 2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்கமாட்டோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரான் அணி பங்கேற்காது என்று அந்த நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் அகமது டோன்யமாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டில் நடைபெறும் போட்டிகளைப் புறக்கணிப்பதாக ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஈரான் கால்பந்து அணி ஏற்கனவே உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்று, ‘ஜி’ (G) பிரிவில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் விலகியிருப்பது விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.