2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு சிறு கட்சிகளும், அமைப்புகளும் கரம் கோர்த்து வருவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் ஆகிய அமைப்புகள் தங்களின் முழு ஆதரவை சீமானுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளன.
ராஷ்டிரிய உலமா கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான் தலைமையிலான நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்ததுடன், வரும் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய களப்பணியாற்றுவோம் என உறுதியளித்துள்ளனர். இந்த கூட்டணி மற்றும் ஆதரவுப் போக்கு, தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
