“சாரி.. சாரி..” சியர் லீடர் மடியில் விழுந்த பின் மன்னிப்பு கேட்ட வீரர்… வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற வீரர்கள்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 11, 2026

Spread the love

அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியின் போது, மரியோ செயின்ட் சூப்பரி என்ற வீரர் பந்தை வேகமாகத் துரத்திச் சென்றபோது நிலைதடுமாறி எதிர் அணியை உற்சாகப்படுத்தும் வீராங்கனை ஒருவரின் மடியில் எதிர்பாராத விதமாக விழுந்தார். இந்தச் சம்பவத்தால் மிகுந்த தர்மசங்கடத்திற்கு உள்ளான அந்த வீரர், அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். போட்டி நடுவே தொடர்ந்து கொண்டிருந்ததால், அவரது சக வீரர்கள் அவரை அங்கிருந்து கையைப் பிடித்து இழுத்துச் சென்று மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த அறிவுறுத்தினர்.

இந்த சுவாரசியமான நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீரரான மரியோ, அந்தப் பெண்ணிடம் காட்டிய மரியாதையையும் மன்னிப்பையும் பலர் பாராட்டி வரும் நிலையில், ஒரு சிலர் அவர் விளையாட்டாக அப்படிச் செய்ததாகக் கேலி செய்து வருகின்றனர். விளையாட்டின் போது வேகம் காரணமாகத் தடுமாறி விழுந்த இந்த ‘பெர்ஃபெக்ட் லேண்டிங்’ வீடியோ, தற்போது விளையாட்டு ரசிகர்களிடையே ஒரு நகைச்சுவையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.