“என்னை அவ சாக விடமாட்டா” நள்ளிரவில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு.. அடுத்த நொடியே கணவரும் தற்கொலை…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டு வந்த கணவன், தற்கொலை செய்யத் திட்டமிட்டு அதைத் தடுக்க முயன்ற மனைவியையே தீயிட்டு கொளுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நாகபூஷணம் என்பவர் கடந்த சில காலமாகத் தீவிர சிறுநீரக நோயால் (Kidney Disease) பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், தனது வாழ்வை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தார்.

தான் தற்கொலை செய்ய முயலும்போது தனது மனைவி ஜெயம்மா அதைத் தடுத்துவிடுவார் என்ற அச்சத்தில், நாகபூஷணம் ஒரு பயங்கரமான முடிவை எடுத்தார். நள்ளிரவில் மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் பார்த்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். மனைவியால் தனது தற்கொலை முயற்சிக்கு எந்தத் தடையும் வந்துவிடக் கூடாது என்ற கொடூரமான எண்ணமே இந்த விபரீத செயலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

   

மனைவி தீப்பற்றி எரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, நாகபூஷணம் தான் திட்டமிட்டபடி பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், பலத்த காயமடைந்த ஜெயம்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.