அரசியல் களத்தில் விஜய்யின் ‘பவர் பிளே.. பெண்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகையா?.. தளபதியின் ‘மாஸ்டர்’ ஸ்ட்ரோக்.. ஆடிப்போன தமிழக அரசியல் களம்..!!!

By Rajeshwari on பங்குனி 8, 2026

Spread the love

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் 35,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் சிறப்புத் திட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த ‘பவர் பிளே’ அதிரடித் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

   

“>

   

இந்தத் திட்டம் தவெக கட்சியின் ஒரு முக்கிய தேர்தல் வாக்குறுதியாகவோ அல்லது கட்சியின் நலத்திட்டமாகவோ பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை விட இது பல மடங்கு அதிகம் என்பதால், இது ஒரு மிகப்பெரிய அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது.

 

இந்நிலையில் சாமானிய மக்களின் தேவைகளை அறிந்து விஜய் இத்தகைய நலத்திட்டங்களை அறிவிப்பது, வரும் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பலத்த சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிதி உதவி பெண்களின் கல்வி, சிறு தொழில் மற்றும் குடும்பத் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.