“வயிற்றில் எட்டி உதைத்து…” கதறிய 15 வயது சிறுமி… இன்ஸ்டா பிரபலத்தின் கொடூர செயல்… போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on பங்குனி 8, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் பிரபலமான ‘காசிமேடு மீனவன் கவின்’, 15 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியதற்காகக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அதிவேகமாக வந்த தனது இருசக்கர வாகனத்தால் சிறுமி மீது மோதிய கவின், அது குறித்துக் கேட்ட சிறுமியின் வயிற்றுப் பகுதியில் மிகக் கொடூரமாக எட்டி உதைத்துள்ளார். இதைத் தடுக்க வந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களையும் அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கவினை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவர் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து முக்கிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இணையத்தில் புகழடைந்த ஒரு நபர், பொது இடத்தில் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.