BREAKING: அதிமுகவுடன் கூட்டணி…. திமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

By Nanthini on பங்குனி 8, 2026

Spread the love

ஓமலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தமிழரசு, திமுகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, 2006 முதல் 2011 வரை ஓமலூர் தொகுதி எம்எல்ஏவாகப் பணியாற்றிய தமிழரசு, கடந்த 2021-ம் ஆண்டு திமுகவில் இணைந்திருந்தார்.

தற்போது, அதிமுகவிலிருந்து அதிருப்தியாளர்கள் பலர் திமுகவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், அதற்கு நேர்மாறாக திமுகவிலிருந்து தமிழரசு வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஓமலூர் தொகுதி அரசியலில் புதிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.