அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அந்த நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், இனி அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தாது (“No More Attack”) என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனுடன் ஒரு முக்கிய நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளார். அண்டை நாடுகளின் மண்ணைப் பயன்படுத்தி மற்ற நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்தால் மட்டுமே, ஈரான் தனது தாக்குதல்களைத் தவிர்க்கும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
