தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினக் குடும்பத்திற்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 3.09 லட்சம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு 90% மானியத்துடன் கூடிய வீடுகள் மற்றும் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
