அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செனட் ஆயுதப் படைக் குழு கூட்டத்தில், முன்னாள் கடற்படை வீரர் பிரையன் மெக்கின்னிஸ் மேற்கொண்ட அதிரடிப் போராட்டம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்திற்கு எதிராக முழக்கமிட்ட அவர், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார். இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், அவரது திடீர் முழக்கத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Senator Sheehy joined Capitol Police in lifting up and ejecting anti war protestor Brian McGinnis from a SASC subcommittee hearing. McGinnis is a Green Party candidate running for Senate in N.C. An antiwar activist filmed the video below: pic.twitter.com/0dVA0ORWXQ
— Alan He (@alanhe) March 4, 2026
தனது போராட்டத்தின் போது, இஸ்ரேலுக்காக அமெரிக்க இளைஞர்கள் தங்கள் உயிரைப் பலிகொடுக்கக் கூடாது என்று பிரையன் மெக்கின்னிஸ் ஆவேசமாக முழக்கமிட்டார். அமெரிக்கா தேவையற்ற போர்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முற்பட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையின் போது, எதிர்பாராதவிதமாக பிரையன் மெக்கின்னிஸின் கை முறிந்தது.
காயமடைந்த நிலையிலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த மெக்கின்னிஸின் இந்தத் தனிநபர் போராட்டம், அமெரிக்க இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு குறித்த தார்மீகக் கேள்விகளை இந்தப் போராட்டம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது,
