ஷாக்..! அமைச்சர் நேரு விவகாரத்தில் சிக்கிய திமுக MLA.. 43 அதிகாரிகளிடம் வசூல்? அறிவாலயத்தை உலுக்கும் ED அறிக்கை..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

அமைச்சர் நேருவுக்கு எதிரான அமலாக்கத்துறை (ED) அறிக்கையில், பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்பின் பெயரும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக நிதி திரட்டுவதாகக் கூறி, சுமார் 43 நகராட்சி அதிகாரிகளிடமிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வரை வஹப் வசூலித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் அறிவாலயத்தைப் புதிய புயலாக உலுக்கத் தொடங்கியுள்ளது. லஞ்சப் புகாரில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பெயர் நேரடியாக அடிபடுவது கட்சித் தலைமைக்கும் அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.