காலையிலேயே குட் நியூஸ்…. வங்கி கணக்கில் ரூ.4000…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு’ முடிவுகளைத் தொடர்ந்து, வருவாய் மாவட்ட வாரியான தெரிவுப்பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி TN அரசு கல்வி உதவித் தொகை (100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ₹1,000) வழங்கி வருகிறது.  கடந்த டிசம்பர் 6, 2025 அன்று நடைபெற்ற இந்தத் தேர்வில், ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலிருந்தும் தலா 100 மாணவர்கள் (50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்) வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் மற்றும் தெரிவுப்பட்டியல் குறித்த விவரங்களை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in-ல் உள்ள ‘Other Examinations’ என்ற பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான இந்த இறுதிப் பட்டியல், பள்ளிக்கல்வி இயக்ககத்தால் சரிபார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டம் தவிர்த்து மற்ற அனைத்து ஊரகப் பகுதிகளிலும் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் வாயிலாக, தகுதியுள்ள மாணவர்கள் தங்களுக்குரிய உதவித்தொகையைப் பெற முடியும். தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் வருவாய் மாவட்ட வாரியான பட்டியலை இணையதளத்தில் உடனே சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.