குஷியோ குஷி..! மேலும் ரூ.1000 ரூபாய் உயர்த்தி அறிவித்தார் ஸ்டாலின்… இரவோடு இரவாக இன்பஅதிர்ச்சி…!!

By Soundarya on பங்குனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, சுமார் 24,033 டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2025-ஆம் ஆண்டில் ஒரு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு மட்டுமின்றி, பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ESI மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்தும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.