உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின் போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் கண்ணில் கற்கள் கலந்த வண்ணம் பட்டதால் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டா ஷ்லாக்பவுர் என்ற அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் தரையிலிருந்த வண்ணப் பொடியை எடுத்துத் தூவியதாகவும், அதில் சிறிய கற்கள் கலந்திருந்ததால் தனது கண்கள் கடுமையாக எரிந்து, சில நாட்களாகப் பார்வை மங்கலாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
இருப்பினும், பிருந்தாவனத்தின் ஹோலி கொண்டாட்டம் ஒரு மாயாஜால அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டுப் பயணிகள் இத்தகைய நெரிசலான வீதிகளில் விளையாடுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் பண்டிகையைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவனம் போன்ற புனிதத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது வீதிகளுக்குப் பதிலாகத் தகுந்த பாதுகாப்புள்ள கோயில் வளாகங்கள் அல்லது தனியார் இடங்களில் ஹோலி கொண்டாடுவது சிறந்தது என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
