ஒரே வார்த்தையில் முடித்த ஸ்டாலின்… காங்கிரஸ் தலைவர்கள் அப்செட், இனி என்ன நடக்கும்?…!!!

By Rajeshwari on பங்குனி 3, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகவும், ஆனால் திமுக தரப்பில் சுமார் 29 இடங்கள் வரை வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு கூட்டணியில் நிலவி வந்த முரண்பாடுகளைக் களைந்து, சுமூகமான முடிவை எட்டுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

   

இந்த உயர்மட்ட ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திமுக தரப்பில் எம்.பி. கனிமொழி ஆகியோரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு அல்லது கூடுதல் இடங்கள் என்ற காங்கிரஸின் பிடிவாதத்தால் தற்காலிகத் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், ப. சிதம்பரத்தின் தலையீடு கூட்டணியைத் தக்கவைப்பதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

   

மேலும் பேச்சுவார்த்தையின் விவரங்கள் குறித்து ராகுல் காந்தியிடம் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை வலுவாக எதிர்கொள்ள வேண்டுமெனில், இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல் ரீதியாகச் சரியானதாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.