“மத்திய கிழக்கு போரின் எதிரொலியா?”… டெல்லி கடையில் நடந்த வினோத சம்பவம்… அதிர்ச்சியில் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!!

By Rajeshwari on பங்குனி 3, 2026

Spread the love

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு மொபைல் உதிரிபாகக் கடையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் ஃபோன் கவரில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் உருவப் படத்தை ஒட்டித் தருமாறு கேட்கிறார்.

மேலும் கடைக்காரரும் கொமேனியின் புகைப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை லாவகமாக அந்த ஃபோனில் ஒட்டுகிறார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இந்த வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by Mi hub (@mi_accessories_hub)

   

“>

 

இந்த வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் கடை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படங்களை ஃபோன் கவர்களில் வடிவமைத்துத் தரும் சேவையை விளம்பரப்படுத்தவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு தலைவர்களின் படங்களை தாங்கள் வடிவமைப்பது வழக்கம் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஈரானியத் தலைவரின் மரணம் குறித்த செய்திகளுக்கு மத்தியில், இந்தியாவில் இத்தகைய மொபைல் கவர்கள் விற்பனை செய்யப்படுவது இணையவாசிகளிடையே ஆச்சரியத்தையும் பல்வேறு கருத்துகளையும் கிளப்பியுள்ளது.