“அதிமுக கூட்டணியில் ராமதாஸ்.. தந்தைக்கு செக் வைத்த மகன்”…. எடப்பாடிக்கு அன்புமணி போட்ட 3 அதிரடி கண்டிஷன்…. ஆடிப்போன ஐயா….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அன்புமணி ராமதாஸ் தரப்பு தங்களை அதிகாரப்பூர்வமான பாமக என முன்னிறுத்தி வரும் நிலையில், அவர் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 18 தொகுதிகள் வரை கோரிக்கை வைத்துள்ள அன்புமணி, அதிமுக கூட்டணியில் தனது தந்தை ராமதாஸைச் சேர்ப்பதற்கு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அன்புமணி ராமதாஸ் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, தங்களது தரப்பிற்கு மட்டுமே ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ராமதாஸ் தரப்பிற்கு அதன் பிறகுதான் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமதாஸுடன் ஒரே மேடையில் தான் பங்கேற்கப் போவதில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

   

மறுபுறம், ராமதாஸ் தரப்பிற்கு திமுக கூட்டணியில் இடமில்லாத சூழலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய விருப்பமில்லாத நிலையும் நீடிக்கிறது. இதனால், தேமுதிக போன்ற கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், ராமதாஸையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அன்புமணியின் இந்த அதிரடி நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாளுவார் என்பதையும், ராமதாஸ் தரப்பு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதையும் பொறுத்தே இந்தக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்.