ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…. பொங்கி எழுந்த மதிமுக… 2026-ல் உடையப்போகும் மெகா கூட்டணி…!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வரும் சூழலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுக்க 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் ‘தனிச் சின்னம்’ ஆகிய கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக தரப்போ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 இடங்கள் என்றும், தனிச் சின்னம் என்றால் வெறும் 3 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் கௌரவத்தையும், தனித்துவத்தையும் விட்டுக்கொடுத்து மிகக் குறைந்த இடங்களில் போட்டியிடுவதை விட, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது என அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் வைகோவிடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. “போராடிப் பெற்ற அங்கீகாரத்தை இழக்க முடியாது” என்ற தொண்டர்களின் ஆவேசக் குரலுக்கும், தேர்தல் யதார்த்தத்திற்கும் இடையே வைகோ எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.