actor suriya

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த 46வது படம்… அதிகாரபூர்வமாக வெளியான டைட்டில் அறிவிப்பு போஸ்டர்!

By Elango on பங்குனி 2, 2026

Spread the love

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இது அவரது 45வது படம். அதற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூர்யா 46 என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். கஜினி படம் போல ஒரு கேரக்டரில் சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது

இதற்கிடையே இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் டைட்டில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படம் ரிலீஸ் இன்னும் ஆகாததால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 4 மாதங்களுக்கு மேல் தள்ளி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.