“யார் அந்த அமெரிக்க பிரமுகர்?… களத்தில் இறங்கிய தளபதியின் படை… ஈரோடு மாநாட்டின் பின்னணியில் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ என்ன?…!!!

By Rajeshwari on பங்குனி 2, 2026

Spread the love

ஈரோடு மாநகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு ராணுவக் கட்டுப்பாடு மிக்க நிகழ்வாக அமைந்தது. கட்சியின் தலைவர் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொண்டர்களின் ஒழுக்கமும் உற்சாகமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி, விஜய்யே தமிழகத்தை ஆளுவார் என்ற முழக்கத்துடன் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் திமுகவின் அதிகார பலத்தையும் பண பலத்தையும் எதிர்கொள்ளும் வகையில், விஜய்யின் ‘சிங்கக்குட்டிகள்’ போன்ற தொண்டர் படை இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இந்த எழுச்சிமிகு கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெறும் என்பதற்கான முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

   

மேலும், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் பலரும் விஜய்யுடன் இணையத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்காவிலிருந்து ஒரு முக்கிய பிரமுகர் விரைவில் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற அரசியல் கட்சிகளின் சவால்களைக் கடந்து, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நோக்கி தவெக முன்னேறி வருவதை இந்த மாவட்டக் கூட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.