“கண் வீங்கி, முகம் மாறி, பேச முடியாமல் தவிக்கும் ஸ்ருதிகா”… ஒரே போஸ்ட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்….!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். தனது கலகலப்பான பேச்சாலும், நகைச்சுவையான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்த அவர், அண்மையில் இந்தியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 18’ மற்றும் தற்போது ‘தி 50’ (The 50) போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிர்ச்சிகரமான உடல்நல அப்டேட் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வீங்கிய கண்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஸ்ருதிகா, தனக்குக் கடுமையான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிகப்படியான காய்ச்சலால் கண்களில் தொற்று ஏற்பட்டு, கண்ணைத் திறக்க முடியாத அளவுக்கு வீக்கம் அடைந்துள்ளதாகவும், அத்துடன் வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சாதாரண கண் நோய் (மெட்ராஸ் ஐ) அல்ல என்றும், வைரஸ் காய்ச்சலின் விளைவு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

   

Shrutika Arjun

   

தற்போது அவர் பங்கேற்று வரும் ‘தி 50’ என்ற ரியாலிட்டி ஷோவில் இருந்து இந்த உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் விலகக்கூடும் எனத் தகவல்கள் பரவின. ஆனால், அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கவே தனக்கு விருப்பம் என்று ஸ்ருதிகா தெரிவித்துள்ளார். தற்காலிகமாக 3 முதல் 5 நாட்கள் வரை ஓய்வு எடுத்துக்கொண்டு, உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஸ்ருதிகாவின் இந்த நிலையைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, மொழி தெரியாத போதிலும் இந்தி நிகழ்ச்சிகளில் ஸ்ருதிகாவுக்காகவே பார்ப்பதாகக் கூறும் ரசிகர்களுக்கு, “உங்கள் அன்பிற்கு நன்றி, விரைவில் மீண்டு வருவேன்” என அவர் உருக்கமாகப் பதிலளித்துள்ளார். கடந்த காலங்களில் சில அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்ட ஸ்ருதிகா, மீண்டும் ஒரு உடல்நலச் சவாலைச் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.