நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய்கிழவி படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் 360 தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனால் இந்த படம் கேரளா மற்றும் ஆந்திரா கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் ரிலீஸ் ஆகவில்லை. அதே போல் வெளிநாடுகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடக்கும் கதைக்களத்தில் காதில் தண்டட்டி அணிந்த பவுனுத்தாயி கேரக்டரில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் கதைக்களம் எல்லாமே தமிழ்நாட்டு மக்களுக்குதான் பரிச்சயமானது. இதுவே கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் வயதான பெண்கள் இப்படி இருக்க மாட்டார்கள். அதனால் நேட்டிவிடி சார்ந்த வகையில் இந்த கதைக்களம் அந்த மாநிலங்களில் பெரிய கவனம் பெறாது என்று படக்குழு தீர்மானித்துள்ளது.
தாய்கிழவி படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெறும் பட்சத்தில், இதே கதையை ரீமேக் செய்து தாய்கிழவியாக பவுனுத்தாயி கேரக்டரில் மீண்டும் ராதிகா சரத்குமாரை நடிக்க வைக்கவும் அவரது மகன்களாக நடித்த அருள்தாஸ் சிங்கம்புலி பாலசரவணன் போன்ற கேரக்டர்களை தெலுங்கில் பிரபலமாக உள்ள நடிகர்களை நடிக்க வைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
